Breaking News

நகர்புற உள்ளாட்சி தேர்தல் நாளை வேட்பு மனு தாக்கல் துவக்கம்!! சூடுபிடிக்கும் அரசியல் களம்!!

அட்மின் மீடியா
0

தமிழகத்தில், 2019 டிசம்பரில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



அதன்படி

நகர்புற உள்ளாட்சித் தேர்தல்வேட்பு மனு தாக்கல்-Jan. 28

வேட்புமனு தாக்கல் நிறைவு: Feb. 4

வேட்புமனு பரிசீலனை: Feb. 5

மனுக்களை திரும்பப்பெற கடைசி நாள்: Feb. 7

வாக்குப்பதிவு: Feb. 19

வாக்கு எண்ணிக்கை: Feb. 22

மார்ச் 4- மேயர், துணை மேயர், நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சி தலைவர்,துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல்

தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. 

நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் விதிமீறல்கள் , முறைகேடுகள் குறித்து புகார் தெரிவிக்க மொபைல் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 18004257072 18004257073 18004257074 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் அளிக்கலாம்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback