மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் இல்லை....
கொரானா பரவல் தடுப்பு காரணமாக 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் ஜனவரி 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டு இருந்தது.
இதையடுத்து, மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு பள்ளிகளைத் திறப்பது குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.இந்த ஆலோசனைக்கு பிறகு, தமிழ்நாட்டில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் கிடையாது. கரோனா தொற்று குறித்து அச்சம் இருப்பதால் மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. நேரடி வகுப்புகளுக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதை பள்ளி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் எனவும் மேலும் நேரடி அல்லது ஆன்லைன் முறையிலேயே வகுப்புகள் நடத்துவது என்பதை அந்தந்த பள்ளிகளே முடிவு செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்