Breaking News

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று

அட்மின் மீடியா
0

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவலும், ஒமிக்ரான் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. டெல்லியிலும் (Delhi Omicron cases) கடந்த சில நாட்களாக பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந் நிலையில் தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்  கொரோனா தொற்றால் (Covid 19) பாதிக்கப்பட்டுள்ளார்  என அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தலையொட்டி தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். இதனை தொடர்ந்து தற்போது இவர் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் லேசான அறிகுறிகள் உள்ளதாகவும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் ட்விட்டரில் கெஜ்ரிவால் பதிவிட்டுள்ளார். 

தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ளுமாறும் தங்களை தனிமைபடுத்திக் கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback