இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் என அறிவிப்பு
அட்மின் மீடியா
0
2022-ஆம் ஆண்டுக்கான வாக்காளர் அடையாள அட்டை சுருக்கமுறை திருத்த நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதையொட்டி நாளை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
2022 ஜனவரி முதல் நாளை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் தயாரித்துள்ளது. இதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் ஏற்கனவே தேர்தல் ஆணையம் சார்பில் வெளியிடப்பட்டது.இந்நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்