Breaking News

அதிரடி! இஸ்லாமிய பெண்களை ஏலம் விட்ட செயலி முடக்கம்!!

அட்மின் மீடியா
0

இஸ்லாமிய பெண்களை ஏலம் விட்டதாக புகார் எழுந்த புல்லி பாய் செயலி முடக்கப்பட்டுள்ளது அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்  கூறியுள்ளார்.

 


புல்லி பாய் என்னும் புதிய செயலியில் இஸ்லாமியப் பெண்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி ட்விட்டர் பதிவில் புகார் தெரிவித்திருந்தார். 

இதையடுத்து, அந்தச் செயலியை கிட்ஹப் நிறுவனம் முடக்கி அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்தனது டிவிட்டர் பதிவில்,,,,

புல்லிபாய் செயலியை முடக்கியதை கிட்ஹப் நிறுவனம் உறுதிசெய்துள்ளது.இணையவழி குற்றங்களைக் கண்காணிக்கும் இந்திய கணினி அவசரகால நடவடிக்கைக் குழுவும், காவல் துறையும் ஒருங்கிணைந்து அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன’ என்றாா்.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback