Breaking News

5ஜி தொழில்நுட்பத்தால் அமெரிக்கா செல்ல இருந்த ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!

அட்மின் மீடியா
0

உலகின் பல நாடுகளில் 5ஜி செல்போன் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அதில் அமெரிக்காவில் அதிவேக திறன் கொண்ட 5ஜி செல்போன் தொழில்நுட்பம் நேற்று அறிமுகப்படுத்தின.



 அதிவேக 5ஜி தொழில்நுட்பத்துக்காக நிறுவப்பட்ட செல்போன் கோபுரங்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சால், விமான போக்குவரத்து பாதிக்கப்படும் என்று அமெரிக்காவில் உள்ள விமான நிறுவனங்கள் கவலை தெரிவித்தன.

5ஜி தொழில்நுட்பத்தால் விமானம் பறக்கும் உயரத்தை அறிய முடியாமல் விமானிகள் திணறுவார்கள். ஓடுபாதைக்கு அருகே செல்போன் கதிர்வீச்சு இருக்கும்போது, விமானம் புறப்படுவதிலும், தரை இறங்குவதிலும் பாதிப்பு ஏற்படும். முக்கிய கருவிகள் செயலிழந்து விடும். இந்த காரணங்களால், இந்தியாவை சேர்ந்த ஏர் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளின் விமான நிறுவனஙகள் அமெரிக்காவுக்கான விமான போக்குவரத்தை ரத்து செய்துள்ளன.

டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ, நியூயார்க் ஜான் கென்னடி ஆகிய விமான நிலையங்களுக்கும், மும்பையில் இருந்து நெவார்க் விமான நிலையத்துக்கும் 19-ந் தேதி (நேற்று) முதல் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.


இது குறித்து ஏர் இந்தியா தனது டிவிட்டர் பக்கத்தில் 


https://twitter.com/airindiain/status/1483509249376329731

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback