Breaking News

56 தமிழக மீனவர்களை மீட்கக் கோரி முதல்வர் கடிதம்..!

அட்மின் மீடியா
0

 இலங்கை சிறையில் வாடும் 56 தமிழக மீனவர்களை விடுவிக்கவும், 75 மீன்பிடிப் படகுகளை மீட்க வலியுறுத்தியும் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.




முதல்வர் எழுதிய கடிதத்தில், இலங்கைச் சிறைகளிலிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டமைக்காக மத்திய அரசுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன் கடந்த 2021 டிசம்பர் 19 மற்றும் 20 ஆம் நாளிலிருந்து இலங்கை சிறைகளில் வாடிக் கொண்டிருக்கும் 56 மீனவர்களை விடுவித்து, பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்துவர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 

மேலும், இலங்கை அரசின் காவலில் வைக்கப்பட்டுள்ள 75 மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொங்கல் திருநாளை முன்னிட்டு, இலங்கை சிறைகளில் உள்ள 56 மீனவர்களை விடுவித்து அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் மீண்டும் இணையும் நோக்கில் உயர்நிலைப் பேச்சுவார்த்தைகளை இலங்கை அரசாங்கத்துடன் நடத்திடக் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback