Breaking News

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!!

அட்மின் மீடியா
0

  • ராஜேந்திர பாலாஜிக்கு நீதிமன்ற காவல்


  • பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு


  • ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் வரும் 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. 

இவர் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடியே 10 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் 15-ந்தேதி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் கேட்டு ராஜேந்திர பாலாஜி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஐகோர்ட்டு டிசம்பர் 17-ந்தேதி தள்ளுபடி செய்தது. 

இதனை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய போலீசார் திட்டமிட்டனர். ஆனால் அதன்பின்பு ராஜேந்திர பாலாஜி தலைமறைவாகி விட்டார் மேலும் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க 8 தனிப்படைகளை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உத்தரவிட்டார்.  

இதற்க்கிடையில் அவர் ஜாமின் கோரி மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார் அந்த மனு வரும் 6ஆம் தேதி ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் தொடர்பான மனு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வர இருக்கிறது. 

இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பல நாட்களாக தேடியும் சிக்காமல் இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று ஓசூரில் தனிப்படையால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகாவில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் அவருக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்து விருதுநகர் மாவட்ட குற்றவியல் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback