Breaking News

சிறுபான்மை ஆணையம் நடத்தும் பேச்சுப் போட்டியின் முதல்பரிசு ரூ.1 லட்சம்! முழு விவரம்....

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு சிறுபான்மை ஆணையம் தமிழக கல்லூரி மாணவ மாணவியருக்காக நடத்த இருக்கும் பேச்சுப் போட்டிகளில் முதலிடம் பிடிக்கும் மாணாக்கர்களுக்கு முதல் பரிசு 1 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். 

மேலும், இந்த போட்டிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வெளியிட்ட அறிக்கையில்....


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அனுமதி மற்றும் ஆலோசனையின் பேரில் தமிழ்நாடு அரசு சிறுபான்மை ஆணையம் கல்லூரி மாணவ, மாணவியருக்கான தமிழ் மற்றும் ஆங்கில பேச்சு போட்டியினை நடத்த திட்டமிட்டுள்ளது.

மத நல்லிணக்கம், சமூக நல்லிணக்கம், சமூகநீதி, சாதியற்ற தமிழகம், சமூகநீதியுடன் கூடிய பொருளாதார வளர்ச்சி, மாநில உரிமைகள், தமிழர் பண்பாடு போன்ற உன்னத கொள்கைகளையும், லட்சியங்களையும் இன்றைய இளந்தலைமுறைக்கு அறிமுகப்படுத்தி, அவைகளின் முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில், இப்போட்டிகள் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கல்லூரி மாணவ - மாணவியருக்காக நடத்தப்படும்.

மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்லூரிகளையும் சேர்ந்த மாணவர்கள் சம்மந்தப்பட்ட மாவட்டங்களில் நடக்கும் பேச்சு போட்டிகளில் கலந்து கொள்ளலாம். 

தமிழிலும், ஆங்கிலத்திலும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படும். மாவட்ட அளவில் நடத்தப்படுகின்ற போட்டிகளுக்கு முதல் பரிசாக 20000, இரண்டாம் பரிசாக 10000, மூன்றாம் பரிசாக 5000 வழங்கப்படும்.

மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற மாணவர்கள் பங்குபெறும் மாநில அளவிலான போட்டி இறுதியில் நடைபெறும். அதில் வெற்றி பெறுகின்ற மாணவருக்கு முதல் பரிசாக 1 லட்சம், இரண்டாம் பரிசாக 50000, மூன்றாம் பரிசாக 25000 வழங்கப்படும். 

மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசினையும், சான்றிதழையும் வழங்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பெருமனதுடன் இசைவு தந்துள்ளார்.

பேரா. முனைவர். ஜெ. கான்ஸ்டன்டைன் ரவிச்சந்திரன் ME.,LLB.Ph.D. ஆசிரியர், தி ரைஸிங் சன் அவர்கள் ஆங்கில பேச்சுப் போட்டிகளுக்கும், பேரா. முனைவர். ஜெ. ஹாஜாகனி M.A.Ph.D., தமிழ் துறை தலைவர், காயிதே மில்லத் கல்லூரி, மேடவாக்கம் அவர்கள் தமிழ் பேச்சுப் போட்டிகளுக்கும் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்கள்.

மாவட்டத்திலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து கல்லூரிகளுக்கும் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் நடக்க இருக்கும் போட்டி சம்பந்தமான அனைத்து விபரங்களும் தனியா அனுப்பி வைக்கப்படும். தமிழிலும், ஆங்கிலத்திலும் நடத்தப்படும் இப்போட்டிகளுக்கு தனித்தனியாக பரிசுகள் வழங்கப்படும். மாணவர்கள் பங்கேற்று பயன்பெற அன்புடன் வேண்டுகிறேன். என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback