FACT CHECK சவூதியில் அரசக் குடும்பத்தினர் திருவாசகத்தை தலையில் சுமந்து செல்லும் வீடியோ உண்மை என்ன!!!!
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் சவூதி அரேபியாவில் மன்னர் தலைமையில் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மாணிக்கவாசக சுவாமிகள் எழுதிய திருவாசகத்தை தலையில் சுமந்து செல்லும் அற்புதமான அந்த காட்சியை பாருங்கள் என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ கடந்த 2016 ம் ஆண்டு இந்து ஆன்மீக சொற்பொழிவாளர் மொராரி பாபு தலைமையில் தனியார் ஹோட்டலில் நடைபெற்ற ராம் கதா என்ற இந்து பிராத்தனை நிகழ்ச்சி ஆகும்.
வீடியோவில் தலையில் சுமந்து செல்லும் புத்தகம் திருவாசகம் இல்லை, ராமாயணம் ஆகும்
மேலும் ராமயணத்தை சுமந்து செல்லும் பெண் அரசகுடும்பத்தை சேர்ந்தவர்கள் இல்லை
மேலும் வீடியோவில் வரும் இஸ்லாமியர் அரபு நாட்டின் விவகாரங்கள் குறித்து உரையாற்றுபவரான சுல்தான் அல் கஸ்ஸாமி ஆவார்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
https://www.youtube.com/watch?v=YDk4Byqu1v4&t=380s
Tags: FACT CHECK மறுப்பு செய்தி