BREAKING தமிழகத்திலும் நுழைந்தது ஓமைக்ரான் நைஜீரியாவில் இருந்து வந்த ஒருவருக்கு தொற்று உறுதி…!
நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு ஓமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒருவருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கபட்டு வருவதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் ஓமைக்ரான் உறுதியான நபருடன் தொடர்பில் இருந்த 7 பேரின் மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒமிக்ரான் தொற்று பரவல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,
தமிழகத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நைஜீரியாவில் இருந்து தோஹா வழியாக தமிழகம் வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்த மற்ற 7 பேருக்கு மரபணு மாற்றம் அடைந்த கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் S varient- இல் மொத்தம் 8 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதில் ஒருவருக்கு மட்டும் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்
Tags: தமிழக செய்திகள்