Breaking News

BREAKING டிச.15ல் தொடங்க இருந்த சர்வதேச விமான போக்குவரத்து ஒத்திவைப்பு...

அட்மின் மீடியா
0

ஓமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் வருகிற டிசம்பர் 15ம் தேதி முதல், தொடங்க இருந்தசர்வதேச விமான போக்குவரத்து சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 


தென் ஆப்ரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உருமாறிய புதிய வகை ஓமைக்ரான் கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகள் தங்களது எல்லைகளை மூடி வருகின்றன. வெளிநாட்டு பயணிகள் தங்கள் நாடுகளுக்குள் வர தடை விதித்துள்ளன.

இந்தியாவை பொறுத்தவரை விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முன்னதாக கொரோனா தொற்று காரணமாக, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சர்வதேச விமான சேவை டிச. 15 ல் தொடங்கும் என நவம்பர் 26 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.


 

ஆனால் நேற்று இந்திய விமான போக்குவரத்துகள் தென் ஆப்ரிக்கா , ஜப்பான் நாடுகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஓமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச பயணிகள் விமான சேவையை ஒத்திவைப்பதாக , விமான போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.அதோடு ஓமைக்ரான் பாதிப்புள்ள 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே, கட்டாயம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback