பிரபஞ்ச வரலாற்றில் முதல்முறையாக சூரியனை தொட்டா விண்கலம் நாசா வெளியிட்ட வீடியோ.....
கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி பார்க்கர் சோலார் ப்ரோப் என்ற விண்கலமானது அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கேனவரல் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணை நோக்கி செலுத்தப்பட்டது. இந்த விண்கலமானது சூரியனின் வளிமண்டல மேலடுக்கை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டது.
இது குறித்து மிச்சிகன் பல்கலை விஞ்ஞானி ஜஸ்டின் காஸ்பர் கூறியதாவது பார்க்கர் மிக வேகமாக சூரியனை சுற்றுகிறது. தற்போது, சூரியனின் மையப் பகுதியில் இருந்து, 1.30 கோடி கி.மீ., துாரத்தில் பார்க்கர் உள்ளது.வினாடிக்கு, 100 கி.மீ., வேகத்தில் சுற்றும் பார்க்கர், மூன்று முறை சூரியனின் வெப்ப வாயு மண்டலத்திற்குள் நுழைந்து வெளிவந்துள்ளது. இது ஒருவகையில் சூரியனை தொட்டது போன்றது தான்.
மேலும் இந்த விண்கலம் அங்கு உள்ள துகள்கள் மற்றும் காந்தப் புலங்களின் மாதிரிகளை சேகரித்து கொண்டதாக நாசா தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் சூரியன் பற்றி அறியாத பல தகவல்கள் நமக்கு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
பார்க்கர் விண்கலம் சூரிய அறிவியலில் மாபெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்த விஞ்ஞானிகள் சூரிய குடும்பத்தில் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் சூரிய மண்டலத்தின் நெருங்கிய நட்சத்திரம் பற்றிய முக்கியமான தகவல்களை கண்டறிய பெரிதும் உதவும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்
https://www.youtube.com/watch?v=LkaLfbuB_6E&t=3s
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ