கோவையில் லாரி மோதி அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து! - அதிர்ச்சி சிசிடிவி வீடியோ......
மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று காலை எட்டு மணி அளவில் பேருந்து நிலையத்திலிருந்து சத்தியமங்கலத்துக்கு 30 பயணிகளுடன் அரசு பேருந்து சென்றது.
பேருந்து மீது லாரி மோதி விபத்தானது இந்த விபத்து குறித்து சிறுமுகை காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் காயமடைந்த அனைவரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்பலி எதுவும் ஏற்படவில்லை இந்த விபத்தின் காரணமாக சிறுமுகை சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
வீடியோ பார்க்க:-
https://twitter.com/gurusamymathi/status/1475338298943967234
கோவை மாவட்டம் சிறுமுகை அருகே இன்று காலை பேருந்து மீது லாரி மோதி விபத்து. பேருந்து கவிழ்ந்ததில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயம். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிறுமுகை போலீசார் விசாரணை. @News18TamilNadu pic.twitter.com/szWYgY4FYu
— Gurusamy (@gurusamymathi) December 27, 2021
Tags: தமிழக செய்திகள்