Breaking News

யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு

அட்மின் மீடியா
0

யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கு ரத்து மாரிதாஸ் மீது வழக்கு பதிந்தது செல்லாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது


சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யவேண்டும் என தாக்கல் செய்த வழக்கில்  பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் அவதூறு பிரச்சாரம் செய்ததாக மாரிதாஸ் மீது 505(1)&(2), 124(A), 504, 153(A) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிந்தது செல்லாது என்று கூறி வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது.

பிபின் ராவத் மரண விவகாரத்தில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ட்விட்டரில் கருத்து பதிவிட்டதாக கூறி மதுரையில் மாரிதாஸை போலீசார் கடந்த 9-ஆம் தேதி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட யூடியூபர் மாரிதாஸ் தேனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் 2020 ம் ஆண்டு போலி இ மெயில் மூலம் யூடியூபில் அவதூறு கருத்துகளை பரப்பியதாக பதியப்பட்ட வழக்கில் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback