நடிகர் ரஜினிகாந்த் அறக்கட்டளை சார்பில் இலவச டிஎன்பிஎஸ்சி பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்... முழு விவரம்....
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
இந்திய திரைத் துறையின் சூப்பர் ஸ்டார் பத்மபூஷன் ரஜினிகாந்த் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளை ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களின் கல்வியை மேம்படுத்தி அதன் மூலம் ஒரு முற்போக்கான சிந்தனை, தலைமைத்துவம், அறிவியல் மனப்பான்மை, ஜனநாயகமயமாக்கப்பட்ட கல்வி மற்றும் நிலையான பொருளாதார அமைப்பு ஆகியவற்றை அமைப்பதற்காக உருவாக்கப்பட்டது.
எங்களுக்கு உலகளாவிய பார்வை இருந்தாலும், எங்களது ஆரம்ப முயற்சிகளை தமிழ்நாட்டில் மட்டுமே எடுக்க விரும்புகிறோம். தமிழ்நாட்டு மக்களின் கருணையும் அன்பும் தான் தனக்கு இவ்வளவு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது என்று சூப்பர் ஸ்டார் எப்போதும் கூறுவார்.
எனவே, இந்த அறக்கட்டளை தமிழகத்திலிருந்து தொடங்கப்படும். நம் அறக்கட்டளை சிறிய ஆரம்பம், முயற்சி, சுய திருத்தம், பிறகு இதுவே இறுதியில் மகத்தான மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்ற கருத்தை நம்புகிறது.தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் ஆசியுடன், இலவச TNPSC குரூப் தேர்வு பயிற்சிக்கான ‘சூப்பர் 100 பிரிவு’ பதிவை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும், பயிற்சி பெற விரும்புவோர் https://rajinikanthfoundation.org என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்