Breaking News

நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் கோவை மக்களே ரெடியா!!! முழு விவரம்....

அட்மின் மீடியா
0

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை இலவச வேலை வாய்ப்பு முகாம். நாள் : 18.12.2021 இடம் : இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி - கோவை



கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 

கொரோனா தொற்றுபரவாமல் இருப்பதற்கான அனைத்து வழிகாட்டும் நெறிமுறைகளுடனும், சமூக இடைவெளியுடனும், 18.12.2021 சனிக்கிழமை அன்று காலை 9 மணியளவில் ஈச்சனாரியில் அமைந்துள்ள இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. 

இம்முகாமிற்கு வரும் அனைத்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் தங்களது சுயவிவரம்(Bio-data) மற்றும் கல்விச்சான்றுகளின் நகல்களுடன் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம். இம்முகாமில்கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை.

பல முன்னணி தனியார் நிறுவனங்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பல்வேறு பணிக்காலியிடங்களுக்கு மனுதாரர்களை தேர்வு செய்யவுள்ளனர். இம்முகாமில் தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு பணிநியமன ஆணை மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் அவர்களால் உடனுக்குடன் வழங்கப்படும். 

இம்முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடும் மனுதாரர்கள் https://forms.gle/y2raWhX1wVUgRF7m6 ல் விவரங்களை பதிவு செய்தல் வேண்டும். 

இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி முற்றிலும் இலவசம். 

மேலும் விவரங்களுக்கு 94990 55938 என்ற எண்ணை அலுவலக நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை தொடர்பு கொள்ளவும். எனவே, மனுதாரர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு இம்முகாமினை பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு:-

https://www.tnprivatejobs.tn.gov.in/ViewData/jobfair_view/102112080003

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback