Breaking News

மதுரையில் தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை

அட்மின் மீடியா
0

 மதுரையில் தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் தடை

 

மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய ஒமிக்ரான் வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் இன்று கலந்தாய்வு கூட்டம் அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அறிவித்துள்ளார். அதன்படி


ரேஷன் கடை, 

திரையரங்கு, 

வியாபார நிறுவனங்கள், 

சூப்பர் மார்க்கெட், 

துணிக்கடைகள், 

வங்கிகள் 

ஹோட்டல், 

பார், 

வணிக வளாகங்கள், 

தொழிற்சாலைகள், 

கல்வி நிறுவனங்கள்

திருமண மண்டபங்கள்,

மார்க்கெட்டு

உள்ளிட்ட பொது இடங்களில் தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே அனுமதிக்கவேண்டும் என  மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback