தானாக இன பெருக்கம் செய்யும் அதிசய ரோபோ வீடியோ
வெர்மான்ட் பல்கலைக்கழகம், டஃப்ட் பல்கலைக்கழகம், ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் விஸ் இன்ஸ்டிட்டியூட் ஃபார் பயலாஜிகலி இன்ஸ்பைர்டு இன்ஜினியரிங் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் சேர்ந்து இந்த ரோபோவை உருவாக்க Xenopus laevis என்ற ஆப்பிரிக்க தவளையின் 3000 ஸ்டெம் செல்களை பயன்படுத்தி இதற்கு உயிர் கொடுத்துள்ளனர். அதனால் தான் இந்த உயிரி ரோபோவின் பெயர் Xenobot.
படம்
2020ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சோதனையில் தற்போது முதல் முடிவு எடப்பட்டிருக்கிறது. அதன்படி, ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவான அளவில் உள்ள இந்த Xenobotsகள் குழுக்களாக இணைந்து செயல்படவும், நகரும் தன்மை கொண்டதாகவும், சுயமாக குணப்படுத்தக் கூடியதாகவும் உள்ளது மேலும் இந்த Xenobot ரோபோ தனக்கு அருகாமையில் உள்ள செல்களை சேகரித்து தனக்கு தானே இனப்பெருக்கம் செய்து கொள்ளுமாம்.
அதாவது ஜீனோபோட்கள் (Xenobots) என்று அழைக்கப்படும் முதல் உயிருள்ள ரோபோக்களால் தாவரங்கள் மற்றும் விலங்குகளில் காணப்படாத பாணியில் இனப்பெருக்கம் செய்ய முடியும்.
சிறு தட்டு ஒன்றில் நீந்திச் சென்று, நூற்றுக்கணக்கான தனித்தனி செல்களை ஒன்று திரட்டி தங்கள் வாய் பகுதியில் புதிய குழந்தை ரோபோட்டுகளை இவை உருவாக்குகின்றன.
இந்த குழந்தை ரோபோட்டுகள் சில நாள்களில் வெளியே வந்து தாய் ஜெனோபோட்டுகள் போலவே நகரவும் செயல்படவும் தொடங்குகின்றன
மேலும் இந்த Xenobot உணவு இல்லாமல் ஒரு வார காலம் வரை உயிர் வாழுமாம்.
மேலும் தகவலுக்கு வீடியோ பார்க்க:-
Tags: தொழில்நுட்பம்