பருவமெய்திய இஸ்லாமிய பெண்கள் விரும்பியவரை மணக்கலாம்-பஞ்சாப் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
வயதிற்க்கு வந்த இஸ்லாமிய பெண்ணுக்கு, தான் விரும்பும் நபரை திருமணம் செய்து கொள்ளும் உரிமை இருக்கிறது என்றும் அப்பெண்ணின் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு அப் பெண்ணின் முடிவில் தலையிட உரிமை இல்லை என்றும் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் 17 வயது முஸ்லீம் பெண் ,33 வயதுடைய இந்து இளைஞரை
திருமணம் செய்துக்கொண்டார். இந்தத் திருமணத்துக்கு பெண்ணின் பெற்றோர்
எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். குடும்ப உறுப்பினர்களை எதிர்த்து இருவரும்
திருமணம் செய்து கொண்டதால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும்
பாதுகாப்பு அளிக்கக் கோரி அந்த பெண் பஞ்சாப் மற்றும் அரியானா
உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த போது, இருதரப்பையும் விசாரித்த நீதிபதி ஹர்நரேஷ் சிங்கில் அவர்கள்..
இஸ்லாமிய விதிப்படி, ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பருவமெய்தியதும் அவர்கள் திருமணம் செய்யும் தகுதி உடையவர்கள் ஆகிறார்கள். அந்த வகையில் 15 வயது முதலே அவர்கள் பெரியவர்களாக கருதப்பட வேண்டும்
பருவமெய்திய இஸ்லாமிய பெண்ணுக்கு, அவர் விரும்பும் யாரையும் திருமணம் செய்யும் உரிமை இருக்கிறது. அந்த பெண்ணின் முடிவில் அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலர் தலையிட உரிமை இல்லை’’ என்று கூறி, அந்தத் தம்பதிக்கு காவல் துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
முஸ்லீம் பெண்ணின் திருமணம் என்பது முஸ்லீம் தனி நபர் சட்டத்துக்கு உட்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
டின்ஷா ஃபார்டுன்ஜி முல்லா எழுதிய ‘முகமதிய சட்டத்தின் கொள்கைகள்’ எனும் புத்தகத்தில் 195-வது பிரிவில், ‘இஸ்லாமிய பெண் பருவமெய்தியவுடன் தான் விரும்பும் நபரை திருமணம் செய்யும் தகுதி உடையவளாகிறாள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதைக் குறிப்பிட்டே நீதிபதி ஹர்நரேஷ் சிங் கில், இவ்வழக்கில் அப்பெண்ணின் தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளார்.
இதே போல் ஏற்கனவே ஒரு வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் மும்பை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது
பஞ்சாப் நீதிமன்ற உத்தரவு நகல்:-
https://www.livelaw.in/pdf_upload/crwp12067202122122021punjab-and-haryana-hc-406703.pdf
Tags: இந்திய செய்திகள்