Breaking News

யூடியூபர் மாரிதாஸ் மீண்டும் கைது

அட்மின் மீடியா
0

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்து குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் யூடியூபர் மாரிதாஸை அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட யூடியூபர் மாரிதாஸ் தேனி சிறையில் அடைக்கப்பட்டார். 

 

அதன் பின்னர், யூடியூபர் மாரிதாஸை போலி இமெயில் மூலம் யூடியூபில் அவதூறு கருத்துக்களை பரப்பியதாக தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் 2020-ல்  அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு  பதியப்பட்ட வழக்கில் மாரிதாஸ் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்து குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் யூடியூபர் மாரிதாஸ் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. 

இந்நிலையில், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த யூடியூபர் மாரிதாஸ் மீது நெல்லை மேலப்பாளையத்தில் கடந்த 04.04.2020ல் காதர் மீரான் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், மேலப்பாளையம் காவல் நிலையத்தில் 292A, 295 A, 505 ( 2), It act 67 என 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இன்று மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட யூடியூபர் மாரிதாஸ் இன்று நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார். 


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback