Breaking News

வாட்ஸப் உறுப்பினர் பதிவுக்கு குரூப் அட்மின் பொறுப்பாக முடியாது-மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி தீர்ப்பு

அட்மின் மீடியா
0

வாட்ஸ் அப் குரூப் அட்மின் மீது போலீசார் வழக்குவழக்கை ரத்து செய்ய கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுவாட்ஸ் அப் குழு உறுப்பினர்கள் செய்யும் தவறுக்கு குரூப் அட்மின் பொறுப்பாக மாட்டார் என கருத்து




கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். 

அந்த மனுவில் கரூர் வழக்கறிஞர்கள் என்ற பெயரிலான வாட்ஸ் ஆப் குரூப் துவக்கி அட்மினாக உள்ளேன்.இந்த குரூப்பிலுள்ள ஒருவர் இரு சமூகங்களுக்கு இடையே பிரச்னைக்குரிய வகையில் செய்தியை பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் என்னையும் சேர்த்துள்ளனர்.நான் வாட்ஸ்அப் குழுவின் அட்மின் மட்டுமே. நான் அந்த ஆட்சேபகரமான பதிவுக்குப் பொறுப்பாகமாட்டேன். இருப்பினும் போலீஸார் என்னை வழக்கில் சேர்த்துள்ளனர். இதனால் என்மீதான வழக்கை ரத்துசெய்ய வேண்டும்’ என்று  தமது மனுவில் ராஜேந்திரன் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், 'வாட்ஸ் அப் குழு உறுப்பினர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் பணி அட்மினை சேர்ந்தது. 

ஆனால், பதிவுகளை முறைபடுத்தவோ, மாற்றியமைக்கவோ, தணிக்கை செய்யவோ அவர்களால் முடியாது.உறுப்பினர்களின் பதிவு சட்டத்திற்கு உட்பட்டவையே. உறுப்பினரின் பதிவிற்கு அட்மின் பொறுப்பாக முடியாது என ஒரு வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த வழக்கில் வாட்ஸ்அப் குழு அட்மின் என்ற காரணத்துக்காக மட்டும் மனுதாரரின் பெயர் சேர்க்கப்பட்டிருந்தால், குற்றப்பத்திரிகையில் அவரது பெயரை நீக்கவேண்டும். இருப்பினும் வழக்கில் மனுதாரரை தொடர்புபடுத்தும் வகையில் போலீஸார் வேறு தகவல்களைச் சேகரித்திருந்தால், அவர் வழக்கை தகுதி அடிப்படையில் சந்திக்க வேண்டும். என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.



Tags: தமிழக செய்திகள்

Share this