Breaking News

watch Video விண்வெளியில் உள்ளவர்களுக்கு உணவு டெலிவரி செய்த நிறுவனம்....வீடியோ

அட்மின் மீடியா
0

 

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மிகப்பெரிய பணக்காரரான யுசாகு மேசாவா விண்வெளி வீரர்களுக்கு உணவு எடுத்துச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. 44 வயதாகும் யுசாகு மேசாசா, ஜப்பானில் உள்ள கோடீஸ்வரர்களுள் ஒருவர். இந்தியாவில் உள்ள பிளிப்காட் போன்ற ZOZOSUIT என்ற ஆன்லைன் ரீடெய்ல் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

 


இது ஜப்பானின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனம் ஆகும். இந்நிலையில், ரஷிய விண்வெளி வீரரான அலெக்சாண்டருடன் இணைந்து 12 நாள் விண்வெளி சுற்றுலாவிற்க்கு கடந்த 8ஆம் தேதி புறப்பட்டுச் சென்றுள்ளார் யுசாகு. 

அவர் செல்லும்போது அங்கு விண்வெளியில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு (Uber Eats) உபர் ஈட்ஸ் ஆன்லைன் உணவு நிறுவனத்தில் பிரத்யேமாக ஆர்டர் செய்யப்பட்ட சிறப்பு உணவை எடுத்துச் சென்று அங்குள்ளவர்களுக்கு கொடுத்துள்ளார். ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான உபெர் ஈட்ஸ் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. 

அந்த வீடியோவில் விண்கலத்தில் இருக்கும் ஒரு கதவை திறந்து கோடீஸ்வரர் உணவை கொடுக்கின்றார். விண்வெளி வீரர் அந்த பொட்டலத்தை வாங்கிக்கொண்டு விரல் சைகை மூலம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.  இந்த உணவுகளை தனது சொந்த செலவில் விண்வெளி வீரக்ளுக்கு விருந்தாக கொடுத்துள்ளார் கோடீஸ்வர மனிதரான யுசாகு மேசாவா. 

உபெர் ஈட்ஸ் நிறுவனம் தங்களது டுவிட்டர் பதிவில், அமெரிக்க உணவு நிறுவனமான உபெர் இந்த வரலாற்று நிகழ்வை வீடியோவாக தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும், நாங்கள் இந்த உலகில் இல்லை. எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், எதை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் எங்கேயும், எப்போதும், என்ன உணவு வேண்டுமானாலும் டெலிவரி செய்வோம். இப்போது விண்வெளி உட்பட” என்ற விளம்பர வாக்கியங்களை வெளியிட்டுள்ளது உபெர் நிறுவனம்.

வீடியோ பார்க்க:

https://twitter.com/UberEats_JP/status/1470695123398934531 



Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback