Breaking News

இனி மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச திருமணம் தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

அட்மின் மீடியா
0

இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறையின் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், மணமக்களின் ஒருவர் மாற்றுத் திறனாளியாக இருப்பின் திருக்கோயிலில் அவர்களுக்கு நடைபெறும் திருமணத்திற்கான கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்றும், திருக்கோயிலுக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றால் மண்டபத்திற்கான பராமரிப்புக் கட்டணம் மட்டுமே வசூலிக்கபடும் என்றும் அறிவிக்கப்பட்டது.



இந்நிலையில் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை சார்பில், மாற்றுத்திறனாளிக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்கள் மற்றும் கோயிலுக்குச் சொந்தமான திருமண மண்டபங்களில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின், தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்கள், திருக்கோயில்களுக்குச் சொந்தமான மண்டபங்களில் இலவசமாக திருமணம் நடத்தும் திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback