Breaking News

ஹெலிகாப்டர் விபத்தில் சிகிச்சை பெற்றுவந்த கேப்டன் வருண் சிங் உயிரிழப்பு

அட்மின் மீடியா
0

 ஹெலிகாப்டர் விபத்தில் மீட்கப்பட்டு மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவந்த குரூப் கேப்டன் வருண் சிங் உயிரிழப்பு 


நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் கடந்த 8-ம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். 

இந்த விபத்தில் குரூப் கேப்டன் வருண்சிங் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை பெங்களூரு கமாண்டோ மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு அவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குரூப் கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இந்த தகவலை விமானப்படை அதிகாரப்பூர்வாக அறிவித்துள்ளது. இதன் மூலம் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் அதில் பயணம் செய்த அனைவரும் 14 பேரும் உயிரிழந்த சோகமான நிகழ்வு அரங்கேறியுள்ளது.

Give Us Your Feedback