பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்கள் முழு விவரம்....
அட்மின் மீடியா
0
பொங்கலை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ஜனவரி 12ஆம் தேதி முதல் தாம்பரத்திலிருந்து இரவு 9.45 மணிக்கு நெல்லைக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
ஜனவரி 13ஆம் தேதி நெல்லையிலிருந்து இரவு 9.30 மணிக்கு தாம்பரத்திற்கு அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
ஜனவரி 13ஆம் தேதி எழும்பூரிலிருந்து மாலை 3.30 மணிக்கு நாகர்கோவிலுக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
ஜனவரி 14ஆம் தேதி நாகர்கோவிலிலிருந்து மாலை 3.10 மணிக்கு சென்னை எழும்பூருக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்