Breaking News

கொரானாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ரூ 50000 பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0

கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ரூபாய். 50,000 இழப்பீடு பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியீடு


இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு அரசின் சார்பில் கொரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசுதாரர்களுக்கு ரூ.50,000/ (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) நிதி உதவி வழங்க அரசாண வெளியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசுதாரர்கள் அரசின் இழப்பீட்டு உதவித் தொகை பெறுவதை எளிமையாக்கும் வகையில் https://www.tn.gov.in என்னும் தமிழ்நாடு அரசு இணையதள முகவரியில் “வாட்ஸ் நியூ (what’s new) பகுதியில் “Ex-Gratis for Covid-19” என்னும் விண்ணப்பத்திற்கான இணைப்பை தேர்வுசெய்து, ஆன்லைன் (Online) மூலம் விண்ணப்பம் செய்து உதவித் தொகைபெறலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனாவல் உயிரிழந்த முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டு ஏற்கனவே நிவாரணம் பெற்றவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது. கொரோனாவால் பெற்றோர்களை இழந்து ரூ.5 லட்சம், ரூ.3 லட்சம் நிவாரணம் பெற்றவர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தாது என்றும் மற்ற அனைவருக்கும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது



விண்ணப்பிக்க:-

https://www.tn.gov.in/ta


முதலில் மேல் உள்ள லின்ங்கை கிளிக் செய்து  அதில் வாட்ஸ் நியூ (what’s new) பகுதியில் “Ex-Gratis for Covid-19” என்னும் விண்ணப்பத்திற்கான இணைப்பை தேர்வுசெய்து கொள்ளுங்கள்

அடுத்து வரும் பக்கத்தில்  கேட்கப்படும் விவரங்களை சரியாக பூர்த்தி செய்யுங்கள் உங்கள் பெயர், மொபைல் எண் முகவரி, இமெயில்,, என அனைத்தையும் சரியாக பூர்த்தி செய்து கொள்ளுங்கள்

அடுத்து இறந்தவர் பெயர், இறந்த நாள், எந்த மருத்துவமனை ,போன்ற விவரங்களையும் சரியாக பூர்த்தி செய்யுங்கள்

அடுத்து வங்கி கணக்கு விவரங்கள், மற்றும் வாரிசுதாரர்கள் விவரம் என அனைத்தையும் சரியாக பூர்த்தி செய்து சப்மிட் கொடுங்கள் அவ்வளவுதான்


மேலும் விவரங்களுக்கு:-

https://cms.tn.gov.in/sites/default/files/press_release/pr071221_1291.pdf



Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback