கனமழை எதிரொலியாக சென்னையில் 4 சுரங்கப்பாதைகள் மூடல்!!
அட்மின் மீடியா
0
சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள 4 சுரங்கப் பாதைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி சென்னை போக்குவரத்து காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்....
துரைசாமி சுரங்கப்பாதை,
ஆர்பிஐ சுரங்கப்பாதை,
மெட்லி சுரங்கபாதை,
ரங்கராஜபுரம் இருசக்கர வாகனங்கள் சுரங்கப்பாதை
ஆகியவை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மூடப்பட்டுள்ளன.
மேலும் வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் தாங்கள் செல்லும் இடங்களுக்கு தகுந்தாற்போல சாலைகளை தேர்வு செய்து கவனமாக செல்லுமாறு போக்குவரத்து காவல்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது
Tags: தமிழக செய்திகள்