ஜனவரி 3 ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் ஒருநாள் விட்டு ஒரு நாள் கிடையாது – தமிழக அரசு
தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் டிசம்பர் 15-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் முதல்வர் முக ஸ்டாலின் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
அதன்பின்பு தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை டிசம்பர் 31-ஆம் தேதி நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதில் பள்ளி, கல்லுரிகளுக்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, ஜனவரி 3-ம் தேதியிலிருந்து 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள், அனைத்து கல்லூரிகள், தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்கள் அனைத்தும் சுழற்சி முறையின்றி இயல்பாக செயல்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
Tags: கொரானா செய்திகள் தமிழக செய்திகள்