குற்றாலம் அருவிகளில் வரும் டிசம்பர் 31ம் தேதி முதல் ஜனவரி 2 ம்தேதி தடை;மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

 குற்றாலம் அருவிகளில் வரும் டிசம்பர் 31ம் தேதி முதல் ஜனவரி இரண்டாம் தேதி வரை குளிக்க மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.

புத்தாண்டு விடுமுறைக்காக ஏராளமானோர் வருவார்கள் என்பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



தமிழகத்தில் அதிகரித்து வரும் ஒமைக்ரான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், குற்றால அருவிகளில் டிசம்பர் 31 முதல் ஜனவரி 2 வரை 3 நாட்கள் குளிக்க அனுமதி கிடையாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.தொற்று நோய் வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.




Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback