தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை அறிக்கை!
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் - வானிலை அறிக்கை!
தென் தமிழ்நாடு மற்றும் இலங்கையை ஓட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் டிசம்பர் 10ம் தேதி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதே சமயம் இன்று திருநெல்வேலி, தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர், திருச்சிராப்பள்ளி, கரூர், திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் எனசென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
Tags: தமிழக செய்திகள்