Breaking News

ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான கட்டணம் ஜன.,1 முதல் உயர்வு : வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி

அட்மின் மீடியா
0

ஏடிஎம்களில் இலவச பரிவர்த்தனைகளை கடந்து பணம் எடுப்பவர்களுக்கான கட்டணம் ஜனவரி 1ம் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது.வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள், தங்களின் ஏடிஎம் மூலமாக மாதத்திற்கு தலா 5 முறை கட்டணமின்றி பணம் எடுக்கலாம் அல்லது பண இருப்பை பரிசோதிக்கலாம். 



பிற வங்கி ஏடிஎம்களில் என்றால் அதுவும் 3 முறை மட்டுமே இலவசம். ஊரகப் பகுதிகளில் இருப்பவர்களுக்கு 5 முறை கட்டணம் கிடையாது.

கொடுக்கப்பட்ட இலவச பரிவர்த்தனைகளை கடந்து பணம் எடுப்பவர்களுக்கு ஒவ்வொரு முறையும் ஜிஎஸ்டியோடு சேர்த்து ரூ.23.6 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி இக்கட்டணத்தை ஜனவரி 1, 2022 முதல் ரூ.24.78 ஆக உயர்த்திக் கொள்ள அனுமதியளித்தது. 

அதிக பரிமாற்றக் கட்டணத்தை வங்கிகளுக்கு ஈடுகட்டவும், செலவுகள் அதிகரித்திருப்பதாலும் பரிவர்த்தனைக் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அனுமதித்ததாக ஆர்.பி.ஐ., தெரிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback