BREAKING காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது
அட்மின் மீடியா
0
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழக பகுதியில் கரையை கடந்தது
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னை அருகே மாலை 5.30 மணி மற்றும் 6.30 மணிக்கு இடையே கரையைக் கடந்தது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசை நோக்கி மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்தது.
கரையைக் கடந்தபோது அதிகபட்சமாக மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து படிப்படியாக ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நாளை வலுவிழக்கும்.
Tags: தமிழக செய்திகள்