BREAKING 3ம் தேதி வரை எங்கெல்லாம் மழை பெய்யும் தெரியுமா? அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. முழு விவரம்.....
அட்மின் மீடியா
0
குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
29.11.2021: விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி,
மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன
மழையும் தென்காசி மதுரை, திருநெல்வேலி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை,
நாகப்பட்டினம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி
மின்னலுடன் கூடிய கன மழையும், வட கடலோர மாவட்டங்கள், ஏனைய டெல்டா
மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில்
லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
30.11.2021:
கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்
கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால்
பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
01.12.2021:
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில்
ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர
மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு
இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
02.12.2021:
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள்
மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும்
புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும்
பெய்யக்கூடும்.
03.12.2021: தென் மாவட்டங்கள்
மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான
மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு
இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
மேலும் தெற்கு அந்தமான் கடற்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ( நாளை- செவ்வாய்க்கிழமை) உருவாக வாய்ப்பு உள்ளது என்றும் இது மேலும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்