தக்காளி விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த பண்ணைப் பசுமை கடைகளில் தக்காளி விற்பனை: தமிழக அரசு அறிவிப்பு
அட்மின் மீடியா
0
தக்காளி விலையினை கட்டுப்படுத்தும் வகையில் கூட்டுறவுத்துறையின் பண்ணை பசுமை கடைகளில் தக்காளி கிலோ ரூ.85 முதல் ரூ.100 வரை விற்பனை செய்ய தமிழக அரசு திட்டம்
வெளிச்சந்தைகளில் தக்காளி விலையைக் கட்டுப்படுத்தும் வகையில் பண்ணைப் பசுமை கடைகளில் கிலோ ரூ.85 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
வெளிச்சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.110 முதல் ரூ.130 வரை விற்கப்படும் நிலையில் கூட்டுறவுத்துறை சார்பில் குறைந்த விலையில் விற்க அரசு முடிவுசெய்துள்ளது.
2 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் உள்ளிட்ட 65 பண்ணைப் பசுமைக் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்படுமென கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது
Tags: தமிழக செய்திகள்