நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!
தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு அல்லது வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவடையும் எனவும் தெரிவித்துள்ளது.
தற்போது குமரி கடல் மற்றும் அதனை ஒட்டி இலங்கை கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இன்று அரியலூர் ,பெரம்பலூர் ,கள்ளக்குறிச்சி ,சேலம் ,தர்மபுரி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தெற்கு அந்தமானில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது . இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்