அமெரிக்க அதிபராக தற்காலிக பொறுப்பேற்றார் கமலா ஹாரிஸ்
அட்மின் மீடியா
0
அமெரிக்க அதிபராக தற்காலிக பொறுப்பேற்றார் கமலா ஹாரிஸ்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் , துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு தற்காலிகமாக அதிபர் அதிகாரத்தை வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.
ஜோ பைடன் அமெரிக்கா அதிபராக பதவி வகிக்கிறார். துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் பதவி வகிக்கிறார்.
இந்நிலையில் மருத்துவப் பரிசோதனைக்காக அதிபர் ஜோ பைடன் திடீரென வாஷிங்டனில் உள்ள மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து சிகிச்சையில் இருந்து குணமடையும் வரை தனது அதிபருக்குள்ள அதிகாரத்தை துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு தற்காலிகமாக வழங்கி உத்தரவிட்டார்.
பின்னர் சிகிச்சையில் இருந்து ஜோ பைடன் குணமடைந்தாகவும், அதுவரை ஒரு மணிநேரம் 25 நிமிடங்கள் தற்காலிக அமெரிக்க அதிபராக கமலா ஹாரிஸ் பதவி வகித்தார் என்று வெள்ளை மாளிகை செய்து தொடர்பாளர் தெரிவித்தார்.
Tags: வெளிநாட்டு செய்திகள்