தனி மாநகராட்சியாக உதயமானது தாம்பரம்!
சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாக மானிய கோரிக்கை விவாதத்தின்போது அமைச்சர் கே . என் . நேரு அவர்கள் , தாம்பரம் , பல்லாவரம் , செம்பாக்கம் , பம்மல் , அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பேரூராட்சிகள் , ஊராட்சிகளை ஒன்றிணைத்து மாநகராட்சி அமைக்கப்படும் என்று அறிவித்தார்
அதனை தொடர்ந்து, புதிய மாநகராட்சி குறித்த அரசாணை தமிழக அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்டது .
இந்த நிலையில் தற்போது தமிழகத்தின் 20 ஆவது மாநகராட்சியாக தாம்பரம் தரம் உயர்த்தப்பட்டதற்கான அறிவிப்பை அரசிதழில் அரசு வெளியிட்டுள்ளது . 10 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் , தாம்பரம் உள்ளிட்ட 5 நகராட்சிகள் மற்றும் ஐந்து பேரூராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது .
Tags: தமிழக செய்திகள்