Breaking News

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய சிறப்பு முகாம் உடனே செல்லுங்கள்

அட்மின் மீடியா
0

வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் மேற்கொள்வதற்கும் புதிய பெயர் சேர்ப்பதற்கும் வாக்காளர் சிறப்பு முகாம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


18 வயதை பூர்த்தி செய்யக்கூடிய மற்றும் இதுவரை பட்டியலில் பெயர் பதிவுசெய்யாத அனைவரும் 6-ம் எண் விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து  பெயர் பதிவு செய்யலாம். 

வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே பெயர் பதிவுசெய்து, ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு இடம்மாறிய வாக்காளர்கள், திருத்தத்துக்காக 6-ம் எண் விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து வழங்க வேண்டும். தொகுதி மாறிவிடும்

ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாறியவர்கள் 8ஏ விண்ணப்பம் வாங்கி பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.

உங்கள் வாக்காளர் அட்டையில் ,பெயர், பிறந்த தேதி மாதம் வருடம், தந்தைபெயர், கணவர் பெயர், முகவரி, மொபைல் எண் மற்றும் புகைப்படம், திருத்தங்கள் ஏதாவது மேற்கொள்ள 8-ம் எண் விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.

சிறப்பு முகாம் நடைபெறும் நாட்கள் :

13.11.21 

14.11.21 

27.11.21 

28.11.21

ஆகிய நான்கு நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

எனவே அருகில் உள்ள உங்கள் வாக்குசாவடிக்கு சென்று புதிய மற்றும் திருத்தம் இருந்தால் விண்ணப்பித்து கொள்ளுங்கள் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் நாள் : 05.01.2022.மேலும் தெரிந்து கொள்ளுங்கள்


வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா சரிபார்ப்பது எப்படி? தெரிந்து கொள்ள

https://www.adminmedia.in/2020/09/blog-post_99.html


உங்கள் மொபைல் மூலம் வாக்காளர் அட்டை விண்ணப்பிப்பது எப்படி.. வாங்க தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்க

 

வாக்களர் அட்டையில் திருத்தம் செய்வது எப்படி? தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்யுங்க



வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா, இல்லையான்னு தெரியணுமா?: ஒரே ஒரு  எஸ்.எம்.எஸ். அனுப்புங்க



வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தேவையான ஆவணங்கள் என்ன என்று தெரியுமா?


Tags: தமிழக செய்திகள்

Share this