ஒமிக்ரான் உலக நாடுகளை அலற வைக்கும் புதிய வகை கொரோனா... பெயர் !!
தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24-ஆம் தேதி முதல்முறையாகக் கண்டறியப்பட்ட புதிய வகை கரோனா, பாட்ஸ்வானா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்குப் பரவியுள்ளது. ‘பி.1.1.529’ என்ற குறியீடு இடப்பட்டுள்ள அந்த வகைக் கரோனா தொற்று கவலைக்குரிய வகையைச் சோ்ந்தது என உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது. மேலும் இந்த புதிய வகை கொரானாவிற்க்கு கிரேக்க எழுத்து முறைப்படி அதற்கு ‘ஒமிக்ரான்’ எனவும் பெயரிட்டுள்ளது.
மேலும் தென் ஆப்பிரிக்க வகை புதிய ஒமிக்ரான் கரோனா சா்வதேச நாடுகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்கா மற்றும் அதன் 5 அண்டை நாடுகளிருந்து வரும் விமானங்களுக்கு பிரிட்டன் தடை விதித்தது.
அந்த அறிவிப்பும் வெள்ளிக்கிழமை மதியமே அமலுக்கு வந்தது.தென் ஆப்பிரிக்கா மற்றும் அதன் 7 அண்டை நாடுகளிலிருந்து அமெரிக்கா்கள் அல்லாதோா் அமெரிக்கா வருவதற்கு நவ. 29 முதல் அந்நாடு தடை விதித்துள்ளது.
தென் ஆப்பிரிக்க வகை கரோனா தங்கள் நாட்டில் பரவுவதைத் தடுப்பதற்காக உலகின் பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன
Tags: தமிழக செய்திகள்