கோவையில் 86 கிலோ ராட்சத மீன் விற்பனை செய்த கடை
அட்மின் மீடியா
0
கோவையில் உள்ள மீன் கடையில் 86 கிலோ எடை கொண்ட ராட்சத மீன் விற்பனையானது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ராமநாதபுரத்தை சேர்ந்தவர் கபீர்.இவர் 'மிஸ்டர்' என்ற பெயரில் மீன் கடை நடத்தி வருகிறார். கர்நாடக மாநிலம் மங்களூர் பகுதிக்கு மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க சென்றனர்.அந்த பகுதியில் மிகவும் அரிய வகை மீன் giant fish என்ற ராட்சத மீன் சிக்கியது. இதன் எடை 86 கிலோ.
இந்த மீன் இன்று கோவையில் உள்ள கபீரின் மீன் கடைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது.
அரியவகை மீன்களை கண்டுகளிக்க அப்பகுதி பொதுமக்கள் ஆர்வத்துடன் கடைக்கு வந்து செல்கின்றனர்.