கனமழை சென்னை விமான நிலையத்தில் 8 விமானங்கள் ரத்து
அட்மின் மீடியா
0
சென்னையில் பெய்யும் பலத்த மழை காரணமாக மும்பை, சாா்ஜா உட்பட 8 விமானங்கள் இன்று இரவு ரத்து செய்யப்பட்டுள்ளது
வங்கக்கடலின் தென்கிழக்கில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகி உள்ளது. இதன் காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
இதனால் மோசமான வானிலை காரணமாக சென்னையில் 8 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்