17, 18ஆம் தேதிகளில் மீண்டும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தென்கிழக்கு அரபிக் கடலில் இருந்து வட கேரளா தெற்கு கர்நாடகா மற்றும் வட தமிழகம் வழியாக தென்மேற்கு வங்கக் கடல் வரை காற்றின் திசை மாறும் பகுதி காரணமாக
இன்று
ஈரோடு,நீலகிரி ,கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ,நாமக்கல் ,திருப்பத்தூர், வேலூர் ,ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ,திருவள்ளூர் ,விழுப்புரம் ,கரூர், திருச்சி, பெரம்பலூர் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிகமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை
ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர் ,தேனி ,திண்டுக்கல் ,திருப்பூர் ,சேலம் ,தர்மபுரி, நாமக்கல் ,கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
17 மற்றும் 18ம் தேதி
திருவள்ளூர் ,சென்னை,காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு ,ராணிப்பேட்டை ,வேலூர் ,விழுப்புரம் ,திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ,டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
19ஆம் தேதி
தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வடமாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது
சென்னை வானிலை ஆய்வுமைய அறிக்கை:-
Tags: தமிழக செய்திகள்