Breaking News

தமிழக அரசின் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் – விண்ணப்பிப்பது எப்படி?

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் மாணவர்களின் இடைநிற்றலை குறைக்க இல்லம் தேடி கல்வி என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.





தற்போது கொரோனா காலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

முதல்கட்டமாக கடலூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நீலகிரி, தஞ்சாவூர், திருச்சி, மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் துவங்கும் இத்திட்டம் வரும் நாட்களில் மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த திட்டத்தை தன்னார்வலர்கள் மூலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கென தனி இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் http://illamthedikalvi.tnschools.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று தங்களை பற்றிய தகவல்களை பதிவேற்றம் செய்து தன்னார்வலர்களாக இணைந்து கொள்ளலாம் 


தன்னார்வலர்கள் வாரத்திற்கு 6 மணி நேரம் மாணவர்களுடன் செலவிட வேண்டும். 

தமிழ் மொழி தெரிந்து வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

தமிழ், ஆங்கிலம், மற்றும் கணிதம் கற்றுத்தர வேண்டும் 

17 வயது பூர்த்தியாகி இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

கல்விதகுதியாக 12ம் வகுப்பு படித்திருக்கவேண்டும்\

இதன் மூலம் மாணவர்களின் கல்வி இடைநிற்றலை தடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்க:-

https://illamthedikalvi.tnschools.gov.in/volunteer_registration


மேலும் விவரங்களுக்கு:-

https://illamthedikalvi.tnschools.gov.in/Welcome

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback