Breaking News

தமிழக முதல்வர் குறித்து அவதூறு சாட்டை முருகன் மீண்டும் கைது

அட்மின் மீடியா
0

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது, முதல்வரையும், தமிழக அரசையும் அவதூறாக பேசியது தொடர்பாக அக்கட்சியின் ஆதரவாளர் சேர்ந்த சாட்டை துரை முருகன் கைது செய்யப்பட்டார்.

 

கன்னியாகுமரியில் உள்ள மலைகளை உடைத்து கேரளாவிற்கு கடத்துவதாக நாம் தமிழர் கட்சி நேற்று தக்கலையில் போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர் யூடியூபர் சாட்டை துரைமுருகன் பேசும்போது, கேரள முதல்வர் பினராயி விஜயனையும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினையும் ஒப்பிட்டுப் பேசியதோடு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து உள்நோக்கத்துடன் அவதூறாகப் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது.

இது தொடர்பான புகாரில் சாட்டை துரைமுருகனை போலீசார் இன்று கைது செய்தனர். சாட்டை முருகன் பத்மநாபபுரம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் தீன தயாளன் முன் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை வரும் 25 - ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு. அதனை தொடர்ந்து நாங்குநேரி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். சாட்டை துரைமுருகன் மீது 143, 153, 153A, 505 (2),506(1), 269 ஆகிய ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


வீடியோ பர்க்க

https://twitter.com/Srinileaks/status/1447194123149004801

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback