மொபைல் மூலம் IMPS பண பரிவர்த்தனை ரூ.2 லட்சத்திலிருந்து 5 லட்சம் ரூபாயாக அதிகரிப்பு; ரிசர்வ் வங்கி அறிவிப்பு
அட்மின் மீடியா
0
நாட்டில் இணையவழியில் பணப்பரிமாற்றம் செய்வதற்கான அதிகபட்ச வரம்பு இதுவரை ரூபாய் 2 லட்சமாக இருஙக நிலையில் தற்போது அதை 5 லட்சமாக உயர்த்தியுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
IMPS பணப்பரிமாற்றம் மூலம் மொபைல் மூலம் உடனடியாக பண பரிவர்த்தனை செய்ய முடிவும். விடுமுறை நாட்களிலும் இந்த சேவையை பயன்படுத்த முடியும். இந்த முறைக்கான அதிகபட்ச வரம்பு ரூ.2 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் IMPS பணப் பரிமாற்ற சேவையில் ஒரு நாளுக்கு அதிகப்படியாக 2 லட்சம் ரூபாய் மட்டுமே பரிமாற்றம் செய்யப்படும் நிலையில், இந்த வரம்பு 5 லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்படும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார்.
Tags: இந்திய செய்திகள்