தாம்பரம் மாநகராட்சி தமிழக அரசு அரசாணை வெளியீடு ...!
தாம்பரம் மாநகராட்சி அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தாம்பரம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்றும் அருகில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் எனவும் தமிழக சட்டப்பேரவையில் கடந்த சிலநாட்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவித்தது
முன்னதாக தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர், ஈரோடு, திருப்பூர், தஞ்சாவூர், நாகர்கோவில், ஓசூர், திண்டுக்கல் மற்றும் ஆவடி என தற்போது தமிழ்நாட்டில் 15 மாநகராட்சிகள் உள்ளன.
இந்நிலையில் தாம்பரம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தியதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
5 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் இணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது. தாம்பரம் மாநகராட்சியில் தாம்பரம், பல்லாவரம், பம்மல், செம்பாக்கம், அனகாபுத்தூர் நகராட்சிகள் வருகின்றன.மேலும் மாடம்பாக்கம், பீர்க்கன்கரணை, பெருங்களத்தூர் ,திருநீர்மலை ,சிட்லபாக்கம் பேரூராட்சிகளின் வருகின்றன.
இதன் மூலம் தாம்பரம் மாநகராட்சியின் பரப்பளவு 87.64 ச.கி.மீ, மக்கள்தொகை 9.60 லட்சமாக இருக்கும். என தமிழக அரசு தெரிவித்துள்ளது
Tags: தமிழக செய்திகள்