வரதட்சனை வாங்கினால் பட்டம் ரத்து கேரளாவில் அதிரடி
வரதட்சணை வாங்க மாட்டேன் என்று உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திட்ட பிறகே மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்படும் என கேரள பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது
வரதட்சணை வாங்க மாட்டேன் என்று உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திட்ட பிறகே மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்படும் என்று கேரள மாநில கோழிக்கோடு பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் சேர்க்கை படிவம் மற்றும் பட்டம் வழங்கும் படிவத்தில், 'திருமணத்திற்கு வரதட்சணை வழங்கவோ அல்லது வாங்கவோ மாட்டோம்' என்ற அறிவிப்பில் கையெழுத்திடுவதை கட்டாயமாக்கி உள்ளது.
பட்டம் பெறும் மாணவர்கள் அனைவரும் வரதட்சணை வாங்கவோ, கொடுக்கவோ மாட்டோம் என்று உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டு கொடுக்க வேண்டும் என்று கோழிக்கோடு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
உறுதி மொழி பத்திரம் கொடுத்தால் தான் பட்டம் வழங்கப்படும் என்றும் இதை மீறி எதிர்காலத்தில் வரதட்சணை வாங்கினால் அவர்களது பட்டம் ரத்து செய்யப்படும் என்றும் பல்கலைக்கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Tags: இந்திய செய்திகள்