Breaking News

மீடியா துறையில் களமிறங்கிய அதானி குழுமம் அதிகாரபூர்வ அறிவிப்பு வெள்ளிட்டது

அட்மின் மீடியா
0

எரிசக்தி, துறைமுகம், தொழில்நுட்பம் சமையல் எண்ணெய்,மின்சாரம் தயாரிப்பது உள்பட பல துறைகளில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் அதானி குழுமம் அடுத்ததாக ஊடகத்துறையில் களமிறங்க இருப்பதாக அறிவித்துள்ளது\


 

இதற்காக ஊடகத் துறையில் அனுபவம் வாய்ந்த சஞ்சய் புகாலியாவை நியமித்துள்ளது இதற்கு முன் ஸ்டார் நியூஸ், சி.என்.பி.சி. போன்ற நியூஸ் சேனல்களின் நிர்வாக பொறுப்பில் இருந்தவர் ஆவார்

அதானி குழுமம் தொடங்கவிருக்கும் ஊடகம் டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி ஆகிய இரண்டிலும் இருக்கும் என்றும் மூத்த பத்திரிகையாளரான சஞ்சய் புகாலிகா இந்த ஊடகத்தை இந்தியாவின் நம்பர் ஒன் ஊடகமாக மாற்றும் வகையில் திட்டங்களை இயற்றி வருகிறார் என்றும் கூறப்படுகிறது

அனைத்து செய்திகளும் அடங்கிய இந்த ஊடகம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்றும் குறிப்பாக மத்திய அரசுக்கு ஆதரவாகவே இந்த ஊடகம் செயல்படும் என்றும் கூறப்படுகிறது

Tags: அரசியல் இந்திய செய்திகள்

Give Us Your Feedback