Breaking News

டெல்லியில் பெண் காவல் அதிகாரி கூட்டு வன்கொடுமை..! அதிர்ச்சி தகவல் முழு விவரம்....

அட்மின் மீடியா
0

டெல்லியில் பெண் காவலர் கடத்தப்பட்டு கூட்டு வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி சங்கம் விஹார் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் 21 வயதான ஷிப்னா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் நான்கு மாதங்களுக்கு முன்புதான் டெல்லியில் உள்ள சிவில் டிஃபென்ஸ் (டிசிடி) சிவில் பாதுகாப்பு அதிகாரியாக பணியில் சேர்ந்துள்ளார். 

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி பணிக்கு சென்ற ஷாபனா வீடு திரும்பவில்லை.பெற்றோர் பல இடங்களில் தேடியும் மகள் கிடைக்கவில்லை. இதனால், அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். 

26ம் தேதி மாலை தனது அலுவலகத்திலிருந்து கடத்தப்பட்டு ஃபரிதாபாத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பிறகு, குத்திக் கொல்லப்பட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். 

தொடர்ந்து மகளை பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றும் மனு அளித்துள்ளனர்.

இந்நிலையில் காணாமல் போன ஷபானா பரிதாபாத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். போலீசார் விசாராணியிலும், பிரேத பரிசோதனை அறிக்கையிலும் வெளியான தகவல் ஒட்டுமொத்த இந்தியாவை அதிர வைத்துள்ளது. ஷபானவை அந்த கும்பல் கூட்டு பலாத்காரம் செய்து உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தி கிழித்து கொலை செய்துள்ளார்கள்

இந்நிலையில் ஷபானாவின் இத்தகைய கோர சம்பவத்துக்கு நீதி வேண்டும் என்று டெல்லியில் உள்ள பொதுமக்களும், இஸ்லாமியர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அதேபோல் நாடுமுழுவதும் பலர் இந்த கொடூர சம்பவத்திற்க்கு கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றார்கள்

அதே போல் சமூகவலைதளங்களிலும் #JusticeForSabiya என ஹாஸ்டேக்கிலும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றார்கள்

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback